கண்ணை கவரும் இயற்கை அதிசயம் (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 9 Second

spain_water_002ஸ்பெயின் நாட்டில் உள்ள இயற்கையான நீர்ச் சூழல் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் Gran Canaria என்ற மிகவும் புகழ்பெற்ற தீவுகள் அமைந்துள்ளது.

இந்த தீவுகளில் அமைந்துள்ள Bufadero de la Garita என்னும் இடம், எரிமலையின் சீற்றத்தாலும் பாறைகளாலும் ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தின் அருகே உள்ள El Hombre கடற்கரையின் அருகே இயற்கையாக கண்ணைக் கவரும் தனிப்பட்ட நீர் சுழல் நிகழ்வு ஒன்று ஏற்படுகிறது.
spain_water_003
கடலின் நடுவே இயற்கையாக ஏற்பட்டுள்ள ஒரு துளையில், உள்ளிருந்து கடல் நீர் சுழலாக வெளியே வருவதை பார்க்க ஆண்டுதோறும் பல்லாயிரம் சுற்றுலாவாசிகள் வந்துசெல்கின்றனர்.

ஆண்டின் எல்லா காலகட்டத்திலும் இந்த நீர் சுழல் ஏற்படுகிறது என்பதால் சுற்றுலாவாசிகள் ஆண்டின் எல்லா மாதங்களிலுமே பெரும்பாலும் படையெடுக்கின்றனர்.

இந்த துளையிருக்கும் இடத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் அதிவேகமாக ஒருவகையான சத்தத்துடன் உள்ளிளுக்கப்படுகிறது.
spain_water_005
பின்னர் அந்த துளை வழியாக வேகமாக வெளியே வரும்போது சுத்தியிருக்கும் பாறைகள் மீது மோதும் வித்தியாசமான சத்தத்துடன் சுழலாக மாறி வெளியேறுகிறது.

இந்த சுழலில் நீர் உள்ளே இழுக்கப்படும் போது ஏற்படும் வினோத சத்தமும், பின் நீர் அருவி போல் உள்ளிழுக்கப்பட்ட நீர் வெளியேற்றப்படுவதும் இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
spain_water_006

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நல அலுவலர் கைது!!
Next post போலீஸ் சீருடையில் ஏட்டு என்று கூறி வந்த 4 மாத கர்ப்பிணி பெண் கைது!!