27 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மறுப்பு!!

Read Time:1 Minute, 43 Second

283512204fishஇலங்கை கடற்பரப்பில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தடுத்து நிறுத்தி விரட்டியடித்தனர். மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், 27 மீனவர்கள் மற்றும் 6 படுகுகளை கைது செய்து கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள அனைவரும் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

எனினும் இது தொடர்பில் அத தெரண தமிழிணையம் கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரியவிடம் வினவியபோது, அப்படி எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் மறுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐதேக கண்டி சிவஞானம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு!!
Next post திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவியேற்றார்!!