ஷாருக்கான் படம் ஏற்படுத்திய சரித்திர சாதனை!!
கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தில்வாலே துல்ஹானியா லீ ஜாயங்கே’ என்ற ஹிந்தி திரைப்படம் மும்பையில் ஒரே தியேட்டரில் 1000 வாரங்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் திகதி வௌியான இந்த திரைப்படம் மும்பை தியேட்டரில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலக சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் வௌியாகி ஒரே தியேட்டரில் 1000 வாரங்கள் ஓடியதாக வரலாறு இல்லை.
ஷாருக்கான், கஜோல், அனுபம் கெர், கரண் ஜோஹர் ஆகியோரின் நடிப்பில் உருவான இந்த படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கியிருந்தார். காதல் ரசம் சொட்ட சொட்ட திரைக்கதை அமைத்த திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் வெறும் ரூ.4 கோடியில்தான் தயாரானது.
ஆனால் இதுவரை இந்த படம் வசூலித்த தொகை ரூ.122 கோடி ஆகும். ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்பதற்கு துணிச்சல் உள்ளவன் மணமகளை தூக்கிச் செல்வான் என்பது தமிழ்ப் பொருளாகும்.
ஷாருக்கான் மற்றும் கஜோல் ஆகிய இருவரும் உலக அளவில் புகழ் பெற காரணமாக அமைந்துள்ள இந்த படத்தின் மாபெரும் சரித்திர வெற்றிக்கு பாடல்கள் ஒரு முக்கிய காரணம். ஜெதின் லலித் இசையில் அமைந்த இந்த படத்தின் பாடல்கள் இப்பொழுதும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
மும்பையில் உள்ள மராத்தா அந்திர் என்ற தியேட்டரில் நேற்று இந்த படத்தின் 1000வது வெற்றி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த படத்தை இப்போதைக்கு தூக்கும் எண்ணம் இல்லை என்றும், நான் உயிரோடு இருக்கும் வரை இந்த படத்தில் என்னுடைய தியேட்டரில் ஓட்டுவேன் என்று தியேட்டர் அதிபர் கூறியுள்ளார்.
Average Rating