போதைப் பொருள் கடத்த முயற்சி: வெளிநாட்டு இளம்பெண் கைது!!

Read Time:2 Minute, 11 Second

7cc176c4-2c5e-418d-be9e-62dd42f99bc0_S_secvpfகேரள மாநிலம் கொச்சி கஸ்டம்ஸ் கமிஷனர் ராகவனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொச்சி நெடும்பாச்சேரி விமான நிலையத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு கத்தாருக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறிய அதிகாரிகள் விமானத்துக்குள் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.

அப்போது விமானத்தில் பயணித்த வெளிநாட்டு பயணி சீடியா டொமினிக் என்பவரின் மீது கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சீடியா டொமினிக்கை தனியே அழைத்து சென்று அவரது உடமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்திருந்த சூட்கேசில் உள்ள ரகசிய அறையில் ஐபி டிரக் எனப்படும் போதை பொருள் தயாரிக்கப் பயன்படும் மருந்து 20 கிலோ பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் இதன் மொத்த மதிப்பு ரூ.30 கோடி ஆகும். இந்த மருந்தை பயன்படுத்தி மனிதனின் சுவாசக்குழாயில் ஏற்படும் நோயை தீர்க்கலாம். இந்த போதை மருந்தை வட மாநிலத்தில் இருந்து கொச்சிக்கு கொண்டு வந்து கத்தாருக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. அவரிடமிருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் சீடியா டொமினிக்கை கைது செய்து ஆலுவா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் பிறந்த நாளன்று பர்த்டே பார்ட்டிக்கு அழைத்து பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது!!
Next post தாமரை சின்னத்தில் புது கட்சி தொடங்கினார் கம்மன்பில!!