சின்னசேலம் அருகே பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா?: போலீசார் விசாரணை!!

Read Time:1 Minute, 45 Second

6b9ab1d8-774c-49ba-aa92-43b3d1fc277f_S_secvpfசின்னசேலம் அருகே பெத்தானூரில் ரோட்டின் அருகில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கம், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை. அவர் வாகனங்கள் மோதி தூக்கி வீசப்பட்டாரா? அல்லது கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர் சண்முகம் வந்து பார்வையிட்டார். அவர் அங்குள்ள தடயங்களை சேகரித்தார். போலீஸ் மோப்ப நாய் மிஸ்கியும் அங்கு வரவழைக்கப்பட்டது. அது பெத்தானூரில் இருந்து உலகியநல்லூர் வரை ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பிணமாக கிடந்த பெண் யார்? என்பது குறித்து டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எபோலாவுக்கான புதிய தடுப்பு மருந்து: விரைவில் மனிதர்களிடம் சோதிக்கிறது சீனா!!
Next post ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு – கரு முட்டை தயாரிப்பு!!