பெண்ணை கடத்திய மந்திரவாதியை பிடிக்க கேரள போலீசார் நாகையில் முகாம்!!

Read Time:1 Minute, 34 Second

83634c4a-f6e2-4a08-9c72-312fee979f50_S_secvpfகேரளாவிலிருந்து இளம் பெண்ணை கடத்திய மந்திரவாதிகளை நாகூரில் முகாமிட்டு கேரள தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள வாக்கம் பகுதியை சேர்ந்தவர் நசீமா. இவரது மகள் ஹமீதா (23). இவரை அதே பகுதியில் மந்திரித்து தாயத்து கட்டுவது, தகடு செய்து தருவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்த ஷாஜகான் (56). அவரது உதவியாளர் செரீன் (22) ஆகியோர் கடந்த 18–ந்தேதி கடத்தி சென்று விட்டனர்.

இது குறித்து நசீமா அட்டின்ங்கல் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

ஷாஜகான் செல்போனை கண்காணித்தபோது அது நாகை மாவட்டம் நாகூரில் இருப்பதை காட்டியது. இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் கடந்த 22–ந்தேதி முதல் நாகையில் முகாமிட்டு நாகூர் தர்கா, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் ஷாஜகானை தேடி வருகின்றனர். முத்துப்பேட்டை தர்கா உள்ளிட்ட தர்காக்களுக்கும் தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு – கரு முட்டை தயாரிப்பு!!
Next post அண்ணனுடன் ஸ்கூட்டியில் சென்ற 10–ம் வகுப்பு மாணவி பஸ்சில் சிக்கி பலி!!