கடற்தொழிலாளர்களே அவதானம்!!

Read Time:1 Minute, 50 Second

911915961Untitled-1புத்தளத்தில் இருந்து பொத்துவில் ஊடான காங்கேசன்துறை வரையான கடற்பகுதியைச் சூழவுள்ள கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் சீரற்ற காலநிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 150 மில்லி லீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மழை நேரங்களில் இடி, மின்னல் தாக்குதல்களினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து சேவைகள் இன்றும் வழமைக்குத் திரும்பவில்லை.

இன்றும் பெரும்பாலான ரயில்கள் மட்டுப்படுத்தப்பட்டும் இரத்துச் செய்யப்பட்டும் உள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ரயில் பாதைகளில் வௌ்ள நீர் தேங்கியுள்ளமை மற்றும் மண்சரிவு உள்ளிட்ட காரணங்களாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் பிரச்சாரத்தில் இராணுவம்?
Next post சவுதி அரேபியாவில் போதை பொருள் கடத்திய பாகிஸ்தானியர் தலைதுண்டிப்பு!!