நித்திரவிளை அருகே கற்பழிப்பு வழக்கில் சாட்சி சொன்ன பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!!

Read Time:1 Minute, 50 Second

954b18cf-3240-42cd-9b19-b6cc68897800_S_secvpfநித்திரவிளையை அடுத்த பெரியவிளையைச் சேர்ந்தவர் லிஜிராஜ் (வயது 31). இவர், எஸ்.டி. மங்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மகளை கடந்த 2005–ம் ஆண்டு ஜனவரி மாதம் 23–ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக மங்களாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிஜிராஜை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்ணின் தாயார் வல்சம் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர், சமீபத்தில் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.

இந்த வழக்கு வருகிற 6–ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வல்சம் அரிவாளால் வெட்டப்பட்டார்.

படுகாயம் அடைந்த அவர், நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர், இதுபற்றி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.

அதில், கற்பழிப்பு வழக்கில் லிஜிராஜுக்கு எதிராக சாட்சி கூறியதால் அவர், தன்னை வெட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கூறி இருந்தார்.

அதன் பேரில், நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹன்ஸிகாவின் கிளாமரும் எகிறிய சம்பளமும்!!
Next post லதா ரஜினியின் சொத்து முடக்கம்!!