லதா ரஜினியின் சொத்து முடக்கம்!!

Read Time:3 Minute, 3 Second

Untitled-1112சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரித்த மீடியா ஒன் என்ற நிறுவனம் வாங்கிய கடனுக்காக அடமானம் வைக்கபட்டிருந்த ரஜினி மனைவி லதாவின் சொத்துக்களை வங்கி கையகப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினியின் கோச்ச்டையான் திரைப்படத்தை தயாரித்த மீடியா ஒன் என்ற நிறுவனம் எக்சிம் வங்கியில் ரூ.20 கோடி கடன் பெற்றது. இந்த கடனுக்கு ஈடாக ரஜினியின் மனைவி லதாவின் பேரில் உள்ள சொத்துக்கள் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதத்திற்குள் மீடியா ஒன் ரூ.22.1 கோடியை வங்கிக்கு செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் மீடியா ஒன் பணத்தை செலுத்தாததை தொடர்ந்து, வங்கி அடமானம் வைத்த சொத்தை கையகப்படுத்தியுள்ளதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் கையகப்படுத்திய சொத்தை ஏலம் விடப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘எக்சிம்’ வங்கியிடம் எங்கள் நிறுவனத்தின் திருப்பிச் செலுத்தும் திறன் அடிப்படையிலேயே, 20 கோடி ரூபாய் கடன் வாங்கினோம்.

இந்த தொகையை, 2015 மார்ச், 31ம் திகதிக்குள் திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் பேசி இருக்கிறோம். எனவே, இந்த கடனை நாங்களே திருப்பி செலுத்த ஏற்பாடு செய்து வருவதால் உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த், தேவேந்தர் ஆகியோரை வங்கி அணுக வேண்டிஇருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோச்சடையான் திரைப்படத்தால் தனக்கு சில கோடிகள் நஷ்டம் என்று ரஜினி வெளிப்படையாக லிங்கா ஆடியோ விழாவில் பேசியுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு சொத்து பறிபோகும் நிலையில் இருப்பதால் ரஜினியின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நித்திரவிளை அருகே கற்பழிப்பு வழக்கில் சாட்சி சொன்ன பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!!
Next post போட்டியை மறந்து அனுஷ்காவுடன் ஊர் சுற்றும் கோஹ்லி!!