பீகார்: ஓடும் ரெயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்!!

Read Time:1 Minute, 45 Second

4eb996bc-22fe-4012-ac9b-a08a5b752f17_S_secvpfரெயில் பயணத்தின்போது பயணிகளின் பாதுகாப்புக்காக ரெயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் அவ்வப்போது சில கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் பயணிகளிடம் கொள்ளையடித்துள்ள சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூரில் இருந்து சஹர்சா என்ற இடத்திற்கு நேற்றிரவு 9 மணிக்கு ஒரு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் திடீரென்று ரெயில் பெட்டிக்குள் நுழைந்தது. அவர்கள் துப்பாக்கி முனையில் இரண்டு பெட்டிகளில் இருந்த பயணிகளை மிரட்டி பொருட்களை பறித்துக் கொண்டனர். பின்னர், அபாய சங்கிலியை இழுத்து கோபரியா ரெயில் நிலையத்திற்கு முன் இடையில் இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

கொள்ளைக் கும்பலை தடுத்த 19 வயது இளைஞனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த ரெயிலில் பாதுகாப்பில் இருந்து 4 போலீசார் தங்களது பணியை சரியாக செய்யாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிற மொழிப் படங்களை தேட ஆரம்பிக்கும் நடிகை!!
Next post இலங்கை அணியை இலகுவாக வென்றது நியூசிலாந்து!!