அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பள்ளி ஊழியரை கட்டிப்பிடித்து ரெயில் முன் பாய்ந்த வாலிபர்!!

Read Time:2 Minute, 5 Second

0d3a797d-ee60-44ba-9dc1-7de589a7243a_S_secvpfதிருவள்ளூரை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் 60 ஆசிரியர்கள் கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் இன்று காலை ஹீப்ளி சென்னை ரெயிலில் திருவள்ளூருக்கு வந்தனர்.

திருவள்ளூரில் ரெயில் நிற்காது என்பதால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இறங்க முடிவு செய்தனர்.

இந்நிலையில் ரெயிலில் வரும் ஆசிரியர்களை அழைத்து செல்ல பள்ளி பேருந்தை எடுத்துக் கொண்டு தனியார் பள்ளியில் பணிபுரியும் திருப்பாச்சூரை சேர்ந்த பிரேம் (வயது 28) மற்றும் ரமேஷ் ஆகியோர் இன்று அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

ரெயில் வரும் 2–வது பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். சிறிது நேரத்தில் ஹிப்ளி – சென்னை ரெயில் வேகத்தை குறைத்து பிளாட் பாரத்திற்கு வந்து நின்றது. அப்போது பிளாட்பாரத்தில் நின்றிருந்த மனநிலை சரியில்லாத வாலிபர் ஒருவர் திடீரென பிரேமை கட்டியணைத்து கொண்டு ஹிப்ளி ரெயில் முன்பு பாய்ந்தார்.

இதில் மனநிலை சரியில்லாத வாலிபருக்கு 2 கால்களும் துண்டானது. பிரேமுக்கு இடுப்பு, கால்கள் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் மயங்கினார். தகவலறிந்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர்.

உடனடியாக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதாநாயகனாக நடிக்க மறுக்கும் நடிகர்!!
Next post புதிய சந்ததி மீது குருநாகலில் தாக்குதல்!!