புதிய சந்ததி மீது குருநாகலில் தாக்குதல்!!

Read Time:1 Minute, 57 Second

328791975742219120sama-Lஏகாதிபதித்துவ நிலையை தோற்கடித்தல் மற்றும் மனித சமூக சுதந்திரத்தை கட்டியெழுப்பல் என்பவற்றை இலக்காகக் கொண்டு இளைய கலைஞர்கள் ஆரம்பித்துள்ள ´புதிய சந்ததி´ என்ற அமைப்பினர் மீது குருநாகல் கும்புகெட்டே பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சமனலி பொன்சேகா, கவுன் கல்ஹார, இந்ரசாப லியனகே, ஜகத் மனுவர்ன, அமா விஜேசேகர, கௌசல்யா குமாரசிங்க உள்ளிட்ட கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் தொன் கமல் இந்திக உள்ளிட்ட குழுவினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சமனலி பொன்சேகா அத தெரண செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.

பாடல் பாடி, துண்டுப்பிரசுரம் விநியோகித்து தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்ற போது அதனை நிறுத்துமாறு மாகாண சபை உறுப்பினர் அச்சுறுத்தியதாக அவர் கூறினார். அதன்பின் வந்த அவரது குழுவினர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக சமனலி தெரிவித்தார்.

சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாக்குதலில் சமனலி பொன்சேகா, இந்ரசாப லியனகே, உதய தர்மவர்த்தன, லக்ஷமன் விஜேசேகர ஆகியோர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பள்ளி ஊழியரை கட்டிப்பிடித்து ரெயில் முன் பாய்ந்த வாலிபர்!!
Next post நிஷாந்த முத்துஹெட்டிகம விடுதலை!!