சிறிசேன உள்ளிட்ட நால்வர் ஜனாதிபதிக்கு ஆதரவு!!
Read Time:1 Minute, 0 Second
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் நால்வர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
இந்த நால்வரும் அலரி மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர் என ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பிரதான அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாத்தளை நகர சபை உறுப்பினர் துசார பெனாண்டோ, மாத்தளை பிரதேச சபை உறுப்பினர் அசித சேனாரத்ன, தொடங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஏ.யு.சிறிசேன மற்றும் ஊவா பரணகம பிரதேச சபை உறுப்பினர் டி.எம்.சிறிசேன ஆகியோரே ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.
Average Rating