முசிறியில் உயிருடன் பெண்ணை எரித்து கொல்ல முயன்ற தி.மு.க. கவுன்சிலர் கைது!!

Read Time:2 Minute, 27 Second

41719492-485b-42af-91a1-04110be2dcfa_S_secvpfதிருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சியை சேர்ந்த வடக்குத் திரணியாம்பட்டியில் வசிப்பவர் சண்முகம் மனைவி பிச்சாயி (48) கூலித்தொழிலாளி. இவருக்கும் சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்தையன் (59) என்பவருக்கும் சொத்து, நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி காலை சுமார் 11 மணிக்கு பிச்சாயி வீட்டில் நெல் வேக வைத்து காய்ந்ததை குவித்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு சென்ற சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளூர் ஒன்றிய குழு கவுன்சிலர் முத்தையன், அவரது மகன் மோகன்ராஜ் (32) ஆகியோர் தன்னை அசிங்கமாக திட்டியதுடன் வீட்டினுள் விளக்கு எரிக்க வைத்திருந்த மண் எண்ணையை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குச்சியை எரிய வைத்து போட்டதாகவும்,

பின்னர் தனது வீட்டை பிரித்து எறிந்ததுடன் வீட்டில் இருந்த நெல் மூட்டைகளை டிராக்டரில் ஏற்றி கொண்டு போய்விட்டதாகவும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பிச்சாயி போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

முசிறி இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி ஆகியோர் வழக்கு பதிவு செய்து திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்தையன், பத்மநாபன், பூசைமணி மற்றும் விஜயகுமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து முசிறி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். மேலும் தலைமறைவான மோகன்ராஜ், தர்மராஜ் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாயல்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் கடலில் மூழ்கி சாவு!!
Next post தாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்!!