தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களை நட்டாற்றில் விடப் போகிறதா?? -அந்நியன் (கட்டுரை)!!

Read Time:7 Minute, 2 Second

timthumb100 நாட்களில் புதிய தேசம் எனும் நோக்கோடு களம் இறங்கியிருக்கும் பொது எதிரணி வேட்பாளரை நாம் வரவேற்கின்றோம் எனக் கூறி மைத்திரிக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே உங்களில் ஒருவர் கூறிய வார்த்தை “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் எவரும் வாக்களிக்க வேண்டாம், அப்படி வாக்களிப்பவன் உண்மையான தமிழன் அல்ல” அப்படியானால் நீங்கள் ஆதரவு வழங்கியது யாருக்கு??? இதைத்தான் கண்ணாம்மூச்சி விளையாட்டு என்பார்களோ?.

அப்படி என்றால் இதில் பலியாகப் போவது மஹிந்தவா? மைத்திரியா? அல்லது அப்பாவி தமிழ் மக்களா? எதிவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் எனக் கூறும் உங்களால் கூட்டமைப்பு எவருக்கும் ஆதரவு வழங்காது எனக் கூற முடியுமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு என அறிவித்துள்ளனர், அப்படியாயின் வவுனியா மற்றும் யழ் மாவட்டங்களில் நடைபெற்ற மைத்திரி அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஓரிடத்தில் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பளர்கள் கலந்தது கொள்ளாமைக்குரிய காரணம் என்ன? மஹிந்த அரசு வெற்றி பெற்றால் இருதலைக்கொள்ளி மாறும் நோக்கமா?

மைத்திரியுடன் உடன்படிக்கை எதனையும் செய்து கொள்ளவில்லை எனில் அவருக்கு அவருக்கு நீங்கள் ஆதரவு வழக்கியதன் காரணம் என்ன? எதுவித உடன்படிக்கையும் இல்லை எனில் தமிழர்கள் அபிவிருத்தியில் நான் அக்கறை செலுத்துவேன் எனக் கூறிய மகிந்த்தவிற்கு நீங்கள் ஆதரவு வழங்கி இருக்கலாமே?

இதன் உள் நோக்கம் என்ன?எதுவித உடன்படிக்கையும் இல்லாமல் மைத்திரி அரசாங்கத்துடன் இணைந்தது, இவர்கள் என்ன நலத்திட்டங்களை மக்களுக்கு பெற்றுத்தரப் போகிறார்கள் .இவர்களை நம்பி தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்?.

கடந்த 2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் இதேபோன்று மக்களின் உணர்வுகளைத் தூண்டி தமிழரின் தன்மானத்துடன் விளையாடி தமிழர்கள் அனைவரும் தேர்தலை நிராகரிக்க வேண்டும் என்றார்கள் அதன் விளைவு 2009 ல் எம் மக்கள் கண்ணீருடன் சேர்ந்த்த இரத்தம் சிந்தினார்கள். ஒருவேளை 2005 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை எம் மக்கள் நிராகரிக்காமல் இருந்த்திருந்தால் வேறு அரசாங்கம் மாற்றம் பெற்று ஈழப்போர் நடைபெறாமலேயே இருந்திருக்க கூடும்.ஆனால் தமிழ் இனத்தை சிந்திக்க விடாமல் முடக்கியதன் விளைவு என்ன??!!

அதே போன்று ஒரு செயல் தான் தற்போது தேர்தலில் கூட்டமைப்பளர்கள் நிகழ்த்துகின்றனர். ஆனால் மக்கள் தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் இம்முறை தேர்தலில் செயற்பட்டாலே நல்லதொரு ஆட்சியமைப்பை எம்மால் உருவாக்க முடியும்.

இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் பிரச்சினையை வைத்தே அரசியல் நடாத்தி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கதை தான். அப்படி என்ன பிரச்சினை தமிழருக்கு??? இந் நாட்டில் தமிழர் எவரும் வாழ தகுதி இல்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோமா???அல்லது இந் நாட்டில் தமிழர்கள் எந்த சேவைகள் வசதிகளையும் அனுபவிக்கக் கூடாது எனும் நிலையில் உள்ளோமா??? இந் நாட்டு அரசின் மூலம் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உண்மையில் தமிழருக்கு தமிழர்தான் பிரச்சினை.

தமிழர்களை சுயமாக சிந்திக்க விடாது அவர்களை முடக்கி வைத்துள்ளனர் சில தமிழ் பேரினவாதிகள்.அதைத்தான் கூட்டமைப்பும் தற்போது செய்து வருகிறது. ஏனெனில் உண்மையில் நாம் மக்கள் சிந்தித்து செயற்பட தொடங்கிவிட்டால் தமிழர்களை வைத்து அரசியல் நடாத்தும் சில ஆட்சியளர்களின் அதிகாரங்கள் இல்லாமல் போய் விடும் அல்லவா?..

கூட்டமைப்பளர்கள் ஒன்றை உணர்ந்திருக்க வேண்டும் நாம் மக்களை சுயமாக சிந்திக்க விடுவதன் மூலம் தமக்கு பொருத்தமான ஆட்சியாளரை அவர்களே தேர்ந்த்தெடுக்க முடியும். அதன் மூலம் வரும் லாப,நஷ்டங்கள் அவர்களின் பொறுப்பு. வடக்கில் வாழும் தமிழர்களை அடக்கி ஆளும் முறைமையை முதலில் நீங்கள் விட்டு விட்டுங்கள்.

கூட்டமைப்பளர்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களும் தேர்தல் விடயத்தில் யாருடைய அடக்குமுறைகளையும்,அழுத்தங்களையும் மனதில் வாங்காது சுயமாக சிந்தித்து செயற்படுங்கள்.உங்களின் இன்றைய முடிவு நாளை உங்கள் குழந்ததைகளின் எதிர்காலத்தை வளமான பாதையில் கொண்டு செல்வதாக அமைய வேண்டும்

இம்முறை தேர்தலில் யார் கருத்தையும் கேளாமல் சுயமாக முடிவெடுக்கும் உன் தீர்மானமே நாளை உன்னை உண்மையான தமிழன் என போற்றி நிற்கும் ஏனெனில் சிங்கள மக்களின் வாக்குகள் இரு வேட்பாளர்களுக்கும் சமமாக உள்ள நிலையில் தமிழர், முஸ்லீம் வாக்குகளே நாளை யார் ஜனாதிபதி என்பதை தீர்மானிக்கப் போகிறது. நான் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி தற்போது உங்கள் கைகளில். சிந்தித்து செயற்படுங்கள்….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பத்தூர் அருகே கணவன்–மனைவி வெட்டி படுகொலை: காதை அறுத்து கம்மல் கொள்ளை!!
Next post (VIDEO) விஷாலின் அனல் பறக்கும் ஆம்பள டிரைலர்!!