வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கூண்டில் சிக்கிய குரங்குகளை மீட்க போராடிய ஆண் குரங்கு!!

Read Time:1 Minute, 49 Second

2f357e40-03e0-4152-8420-1c1a18132d3c_S_secvpfவேலூ கலெக்டர் அலுவலகத்தில் 10–க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை அங்குள்ள தண்ணீர் குழாய்கள், ஓயர்களில் தொங்கி சேதபடுத்துகின்றன.

கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தபடும் இருசக்கர வாகனங்களை அவ்வப்போது பதம் பார்க்கின்றன. கடந்த மாதம் குரங்கு ஒன்று தொங்கிய போது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில் மனு கொடுக்க வந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து குரங்களை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இதில் சிக்காமல் குரங்குகள் தண்ணீ காட்டி வந்தன.

இன்று காலை வனத்துறையினர் கூண்டில் குரங்குகளை சிக்க வைக்க முயற்சி செய்தனர். இதில் 4 குரங்குகள் கூண்டில் சிக்கின. ஒரு ஆண் குரங்கு சிக்காமல் வனத்துறையினரை எதிர்த்து விரட்டியது.

கூண்டில் சிக்கிய மற்ற குரங்குகளை மீட்க போராடியது. கூண்டின் மேல் அமர்ந்து கொண்டு கூண்டை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இது பலனளிக்கவில்லை. களைத்து போன ஆண் குரங்கு கூண்டில் மீது அமர்ந்து பரிதாபமாக பார்த்தது.

குரங்கை விரட்டிய வனத்துறையினர் அதனையும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கூண்டில் சிக்கிய மற்றொரு குரங்கு நடத்திய பாசப்போராட்டம் பரபரப்பாக பேசப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவை அருகே ரவுடி கொலை: மனைவியை அபகரித்ததால் நண்பர் தீர்த்து கட்டினார்!!
Next post ஓநாய் போல் விசிலடித்து கேலி செய்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த பெண்கள்!!