எண்ணூரில் வாலிபர் கொலை: அண்ணன்–தம்பி உள்பட 4 பேர் கைது!!

Read Time:2 Minute, 1 Second

147f0c17-7962-4ce2-86e7-8c6bee312484_S_secvpfஎண்ணூர், காட்டுக்குப்பம் 4–வது தெருவை சேர்ந்தவர் ரகு மகன் விமல் (வயது 24) மீனவர்.

நேற்று முன்தினம் இரவு கேரம் விளையாட்டில் அவரது நண்பருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுபற்றி கேட்பதற்காக எண்ணூர் கமலாம்மாள் நகருக்கு விமல் வந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அண்ணன்–தம்பியான அருண், ரத்தினம், முனியாண்டி மற்றும் அவர்களது நண்பர் காமராஜர் நகரை பிரபாகரன் சேர்ந்த ஆகியோர் விமலை தாக்கி கத்தியால் குத்தினர். இதில் அவர் இறந்து போனார்.

இது குறித்து எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜான்சுந்தர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அண்ணன்–தம்பிகளான ரத்தினம், அருண் உள்பட 4 பேரையும் கைது செய்தார். அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

கமலாம்மாள் நகரில் உள்ள தெருவில் கேரம் விளையாடிய போது ஒருவரையொருவர் கேலி செய்ததில் தகராறு ஏற்பட்டது. அப்போது விமலின் நண்பர் தாக்கப்பட்டார்.

இதுபற்றி தெரிந்ததும் விமல் எங்களிடம் மோதலில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் நாங்கள் அவரை குத்தி கொன்றுவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

கைதான 4 பேரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டி.கல்லுப்பட்டி அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது!!
Next post காஜல் பேரைச் சொல்லி மோசடியா?