விமான விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 7 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 45 Second

kentucky_accident_002அமெரிக்காவில் விமான விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 வயது சிறுமி மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்
அமெரிக்காவின் கெண்டக்கி மாநிலத்தின் பக் பெர்ரி சாலை அருகே வசித்து வரும் வில்கின்ஸின் வீட்டின் கதவை 7 வயது சிறுமி ஒருவர் மாலை வேளையில் தட்டியுள்ளார்.

அந்த சிறுமி, தான் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியதால் தனது பெற்றோர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டிற்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியுடன் விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கே அந்தப் சிறுமியின் தந்தை மார்ட்டி, தாயார் கிம்பர்லி, அக்கா பைபர் மற்றும் அவரது உறவினர் பெண் சியாரா ஆகிய நான்கு பேரும் விமானத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் நடந்த விசாரணையில், அவர்கள் டென்னிசி மாநில தலைநகரமான நாஷ்வில்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மார்டி நேற்று தன் குடும்பத்தினருடன் புளோரிடாவின் கீவெஸ்ட்டிலிருந்து, ஜெபர்சன் மாநிலத்தில் உள்ள மவுண்ட் வெர்னானுக்கு தனது சிறிய ரக KY 810 விமானத்தில் சென்றுள்ளார்.

மார்ஷல் கவுண்டிக்கு அருகே சென்றபோது விமானம் தன் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்த அவர் விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயன்றார்.

ஆனால் அதற்குள் என்ஜின் கோளாறு ஏற்பட்டு 1800 அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து நொறுங்கியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஏழு வயது சிறுமியான மார்ட்டியின் மகள் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஜல் பேரைச் சொல்லி மோசடியா?
Next post திருமணமான பெண்ணை கற்பழித்த 54 வயது பிரம்மச்சாரி கைது!!