எஸ்.ஜே.சூர்யாவின் இசை ஜனவரி 30-ம் தேதி 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ்!!

Read Time:1 Minute, 49 Second

20e5588b-c3ca-444c-a1e8-a246e6629116_S_secvpf‘வாலி’, ‘குஷி’, ‘நியூ’ உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘இசை’. இப்படத்தில் கதாநாயகன் மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து டைரக்டு செய்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.

இரண்டு இசையமைப்பாளர்களை பற்றிய கதையாக இசை படம் அமைந்துள்ளது. முதலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதையடுத்து, அதைத்தொடர்ந்து பாடல்களை வெளியிட்டனர். இதுவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

படம் எப்போது வெளியாகும் என்று ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், படம் இப்போ, அப்போ என்று எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினர். கடந்த வருடமே வெளியாகவேண்டிய இப்படம் படத்தின் பின்னணி வேலைகள் அதிகமாக இருப்பதால் ரிலீசாக தாமதமாகியிருக்கிறது என்று கூறப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இசை படம் தற்போது ஜனவரி மாதம் 30-ம் தேதி வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ருத்ராட்ச மாலையில் தாலி அணியவில்லை: குஷ்பு!!
Next post இந்து பெண்களை மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்: விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் தீர்மானம்!!