ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி உயிரோடு எரிப்பு: வேன் டிரைவர் கைது!!
தண்டராம்பட்டு அருகே உள்ள சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தனம், இரண்டாவது மனைவி பரமேஸ்வரி(வயது35).
இரண்டாவது மனைவி பரமேஸ்வரிக்கு சுகுணா(15), அபினயா(11) என இரண்டு மகள்களும், சதீஷ்(8) என்கிற மகனும் உள்ளனர். சிகாமணி தனது முதல் மனைவி தனத்துடன் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
பரமேஸ்வரி தனது 3 குழந்தைகளுடன் சேரந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மினி வேன் டிரைவர் பரந்தாமன் (42) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த பரந்தாமன் பரமேஸ்வரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பரமேஸ்வரியை ஆசைக்கு இணங்கும்படி அழைத்துள்ளார். அதற்கு அவர், குழந்தைகள் இருப்பதால் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பரந்தாமன் அங்கிருந்த மண்எண்ணெய் எடுத்து பரமேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் பரமேஸ்வரியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது அருகில் இருந்த பரமேஸ்வரியின் மகள் அபினயா மீதும் தீ பிடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் கூச்சலிட்டனர். அதை கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பரமேஸ்வரி சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பரந்தாமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating