பலவித ஸ்டைல்களில் கலக்கும் ஒபாமா: சூப்பரான செல்பி! (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 15 Second

imagesஅமெரிக்க அதிபர் ஒபாமா, செல்பி எடுத்துக்கொள்ளும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ஏவியேட்டர் கூலிங் க்ளாஸுடன் கண்ணாடியில் வெவ்வேறு முகபாவனையுடனும், செல்பி ஸ்டிக்குடன் தன்னைத்தானே படம் பிடித்துள்ளார்.

சாதாரண மனிதர்கள் கண்ணாடி முன்னும், செல்பி எடுக்கவும் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படியே ஒபாமாவும் செய்து அதை வீடியோவாக பேஸ்புக் மற்றும் யூடியுபில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீடியோவை ஒரே நாளில் 15 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த வீடியோவில் மிசல் ஒபாமாவை பென்சில் ட்ராயிங்கில் வரைந்து தனக்குத்தானே ‘ நன்றாக இருக்கிறது’ என்று சொல்கிறார்.

ஒபாமா கேர் திட்டத்திற்கு பதிவு செய்ய இறுதி நாளை நினைவுபடுத்துவதற்கான ஒத்திகை பார்ப்பது போல் ‘ பிப்ரவரி’ என்பதை திணறித் திணறி சொல்லிப் பார்க்கிறார்.

மேலும், நாட்டின் சுகாதார நிலைகளை பற்றி விளக்கியுள்ள அவர், வாழ்நாளில் ஒரு முறை மட்டும் கிடைக்கும் இந்த வாழ்க்கையை நல்ல ஆரோக்கியமாக வாழ்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் குறித்து பேசிய எதிர்கட்சி பிரிவினர், சிரியா, ஈராக், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாமல், இதுபோன்ற கோமாளித்தனமான புகைப்படங்களை வெளியிட்டிருப்பது இளைஞர்களை கவர்ந்து ஓட்டுக்களை பெறும் முயற்சியாக தோன்றுவதாக விமர்சித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி உயிரோடு எரிப்பு: வேன் டிரைவர் கைது!!
Next post துப்பாக்கியை காட்டி கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் என்ஜினீயர் புகார்!!