குடிபோதையில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது கொடூரன்: கிராம மக்கள் சாலை மறியல்!!

Read Time:1 Minute, 40 Second

f11b8e51-a4e1-4daf-ac3f-a03493644c55_S_secvpfஉத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் 3 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிரான்பூர் நகரில் வசித்து வரும் சகோதரிகளான இரண்டு இளஞ்சிறுமிகளும் நேற்று விளையாடுவதற்காக வெளியே சென்றனர். அப்போது அவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பவார் சிங் (50) என்பவன் குடிபோதையில் இரண்டு சிறுமிகளையும் தன் வீட்டிற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தான்.

தங்கள் வீட்டிற்கு திரும்பிய சிறுமிகளின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் போலீசில் புகார் அளித்தனர். மேலும், குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று மாலை டெல்லி-பௌரி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட பவார் சிங்கை போலீசார் கைது செய்தனர். 2 மற்றும் 3 வயதே ஆன குழந்தைகள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதை பொருள் கடத்தல் வழக்கு: மாடல் அழகி, இணை இயக்குனரை போலீஸ் காவலில் எடுக்க மனு!!
Next post சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் மனைவியிடம் 5½ பவுன் நகை பறிப்பு!!