நான் ஒருநாளும் LATE இல்ல…!!

Read Time:2 Minute, 8 Second

Kajal-Agarwalஐதராபத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:– நேரம் என்பது பொன்னை விட மதிப்பானது. சினிமா உலகத்துக்குள் வந்த பிறகு தான் நேரத்தின் முக்கியத்துவமே எனக்கு தெரிந்தது. காதநாயகியான உங்களுக்கு யாருடன் போட்டி என்று என்னிடம் கேட்டால் நேரத்தோடு தான் போட்டி என்பேன்.

காலத்தோடு சேர்ந்து ஓடுவது காலத்துக்கு தகுந்தாற்போல் என்னை மாற்றிக் கொள்வது என இருக்கிறேன்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகம் தன்னை மாற்றிக் கொள்கிறது. உலகம் எப்பமாறிக்கொண்டு இருக்கிறதோ அதற்கேற்ப ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக் கொள்வது முக்கியம்.

நான் முதல்படத்தில் நடித்த போது எப்படி இருந்தேனோ அது மாதிரி இப்போது இல்லை. காலம் என்னை நிறையவே மாற்றி விட்டது. தோற்றம், ஆடை அணிவது, பழக்க வழக்கம் என எல்லாவற்றிலும் மாறி விட்டேன்.

கல்லூரி படித்த போது முழுசோம்பேறியாக இருந்தேன். வகுப்புக்கு தாமதமாக போய் தினமும் திட்டு வாங்குவது உண்டு. இன்றைக்கு அப்படி இல்லை.

படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சென்று விடுகிறேன். தாமதமாக போனால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் ஏற்படும். இதை அனுபவபூர்வமாக அறிந்தேன்.

கொஞ்ச நேரம் தாமதமாக போனாலே தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடும். எனவே நான் முன்கூட்டியே படப்பிடிப்பு அரங்குக்கு போய் விடுகிறேன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சத்தி–திம்பம் மலைப்பாதையில் இளம்பெண் படுகொலை: முகத்தை எரித்த கொடூரம்!!
Next post மனைவியை கொன்ற கூலித்தொழிலாளி கைது: சந்தேகத்தால் கொன்றதாக வாக்குமூலம்!!