காதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்!!

Read Time:2 Minute, 29 Second

8b8a148f-5b30-4d26-8f72-f5c056f9cd28_S_secvpfஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கோட்டப்பா கொண்டா மலையில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஸ்ரீராம் புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அஞ்சுநாயக் (18) தனது காதலியான கல்லூரி மாணவி சுவாதியுடன் வந்தார்.

பள்ளியில் படிக்கும் போதே தொடங்கிய இவர்களின் காதல் கல்லூரியிலும் தொடர்ந்தது. இருவரும் தனித்தனி கல்லூரியில் படிக்கிறார்கள். என்றாலும் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள்.

அந்த வகையில் நேற்று காதல் ஜோடிகள் மலைக் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட பின் பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு மர்ம வாலிபர் திடீர் என கத்தியுடன் பாய்ந்து வந்து காதலன் அஞ்சுநாயக்கை சரமாரியாக குத்தினார். மார்பு, வயிறு, கை என பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனை தடுக்க முயன்ற சுவாதியையும் சரமாரியாக குத்தினார்.

பின்னர் சுவாதி கையை பிடித்து தரதரவென புதருக்குள் இழுத்துச் சென்றான்.

சுவாதி கூச்சல் போட்டார். அதற்குள் அங்கு கூலி வேலை செய்த ஆட்கள் ஓடி வந்தனர். உடனே அந்த வாலிபர் சுவாதியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

தப்பிச் செல்லும் முன்பு அவர்களின் மணிப்பர்ஸ், செல்போன் ஆகியவை பறித்துக் கொண்டு ஓடி விட்டான்.

இதற்கிடையே கத்தியால் குத்துப்பட்ட அஞ்சுநாயக் அதே இடத்தில் பிணமாக கிடந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சுவாதி நாகராவ் பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

காதலனை கொன்று மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் ‘சைக்கோ’வாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்: மத்திய மந்திரி பெருமிதம்!!
Next post பிணைக்கைதிகளின் தலையை கொடூரமாக துண்டிக்கும் 10 வயது சிறுவர்கள்!!!