தஞ்சை அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவியை கொன்ற காதலன்: திடுக்கிடும் தகவல்!!

Read Time:5 Minute, 14 Second

67249d5e-fc61-43e7-9fe0-eb6d22063737_S_secvpfதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த நடுவிக்கோட்டை செக்கடிகொல்லை பகுதியை சேர்ந்த கருப்பையன்.

இவரது மனைவி சித்ரா. இவரது மகள் சகுந்தலாதேவி (வயது 19). பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை 2–ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கருப்பையன் சித்ராவின் தங்கை பானுமதியை 2–ம் திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சித்ராவும், அவரது மகள் சகுந்தலாதேவியும் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்தனர். அவர்கள் குடியிருந்த வீட்டின் அருகே பானுமதியின் உறவினர் சேகர் குடியிருந்து வருகிறார். இவரது மகன் சங்கர்(29). 8–ம் வகுப்பு படித்துவிட்டு எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

பக்கத்து வீடு என்பதால் சகுந்தலாதேவிக்கும், சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

சகுந்தலா தேவியை சங்கர் திருமணம் செய்து கொள்வதாக கூறி உள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உள்ளனர்.

அவர்கள் இருவரும் அண்ணன், தங்கை முறை என்பதால் அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு இவர்கள் மீது எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சகுந்தலாதேவி உறவு முறையில் தங்கை என்பதால் அவரை திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதை அறிந்து அவரிடம் பழகுவதை சங்கர் தவிர்த்து மற்றொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட சகுந்தலாதேவி, சங்கரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் நீ எனக்கு தங்கை முறை வருவதால் உன்னை திருமணம் செய்துகொள்ளமுடியாது. நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சகுந்தலா தேவி, சங்கரின் காதலியிடம் சென்று நான் தான் அவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன். நீ அவரை விட்டு விலகி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

அதனை அறிந்த சங்கர் சகுந்தலாதேவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சங்கரை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் சகுந்தலாதேவியை கொலை செய்யதிட்டமிட்டார். இதையடுத்து அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்டு நாம் வழக்கமாக சந்திக்கும் வயல்பகுதிக்கு வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி சகுந்தலா தேவியும் அங்கு வந்துள்ளார். அப்போது சங்கர் அவரிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் வாட்டாத்தி கோட்டை போலீசில் சரண் அடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சகுந்தலா தேவி கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. சரணடைந்த சங்கரிடம் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பை சேர்ந்த சிலருக்கும் தொடர்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர்கள் சங்கரின் நண்பர்கள் எனவும் அவர்களது செல்போன் மூலம் தான் சகுந்தலா தேவியை சங்கர் வயல்வெளிக்கு அழைத்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மாணவி பிணம் பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியாபாரியை கொல்ல முயற்சி: பாட்ஷா மகன் உள்பட 2 பேர் கைது!!
Next post வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது: ரூ.2.50 லட்சம் பறிமுதல்!!