வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது: ரூ.2.50 லட்சம் பறிமுதல்!!

Read Time:1 Minute, 30 Second

56858e7e-000d-4673-85a4-7972599ad721_S_secvpfகரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மூர்த்திபாளையத்தை அடுத்து ஆறுமுகம் என்பவரது தோட்டமும், வீடும் உள்ளது. இந்த வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவில் ஆறுமுகத்தின் தோட்டத்து வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது வீட்டினுள் போலீசார் சென்ற போது அங்கு சூதாட்டம் நடந்து கொண்டிருந்தது. சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கரூரை சேர்ந்த சங்கர் (40), காமராஜ் (33), பாலகிருஷ்ணன் (45), சத்தியமூர்த்தி (40), நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுரை சேர்ந்த சிவபாலன் (47), சக்திவேல் (42), ராமலிங்கம் (55), ஞானவேல் (39), மூர்த்தி பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (60), மலைச்சாமி (43), திருப்பூரை சேர்ந்த தமிழரசன் (53) ஆகிய 11 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்து 500 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சை அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவியை கொன்ற காதலன்: திடுக்கிடும் தகவல்!!
Next post கொரட்டூரில் குளிர்பானம் என நினைத்து எண்ணெய் குழந்தை சாவு!!