அவினாசியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது!!

Read Time:3 Minute, 0 Second

43ac6fd7-7ef9-4b19-ad16-39a7bfdcb714_S_secvpfதிருப்பூர் மாவட்டம் அவினாசி அருகேயுள்ள கேந்திபுரம் காந்திஜி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் மல்லிகா (வயது 14) பெயர் மாற்றப்பட்டுள்ளதுது.

இவர் தனது குடும்பத்தினருடன் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அங்கு தரிசனம் முடிந்து அன்னதானம் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்தனர். சிறுமி மல்லிகா வரிசையில் இருந்து வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மதுரை முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த கணேசன் (52) என்ற பெயிண்டர் சிறுமி மல்லிகாவிடம் மிட்டாய் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி கோவிலில் இருந்து வெளியே அழைத்து சென்றார். சிறுமியுடன் அவினாசி – மங்கலம் ரோட்டில் உள்ள தாமரை குளமேட்டுக்கு கணேசன் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி மல்லிகா பெற்றோரிடம் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். மல்லிகாவை மிரட்டிய கணேசன் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மல்லிகா கதறி துடித்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சிறுமியின் சத்தம் கேட்டு அந்த பக்கம் வந்தனர்.

பொதுமக்கள் வருவதை அறிந்ததும் சிறுமியை அப்படியே விட்டுவிட்டு கணேசன் தப்பி ஓட்டம் பிடித்தார். சிறுமியின் அலங்கோல நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கணேசனை துரத்தி சென்று தர்ம அடி கொடுத்தனர்.

மயக்க நிலையில் இருந்த சிறுமியை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தார். கைதான கணேசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் சிறுமியை முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அவினாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேட்டூரில் பெண் உள்பட 3 பேர் மீது ஆசீட் வீச்சு: 7 பேர் கைது!!
Next post உள்ளாடை தெரியுமளவு ஆடையை சரிசெய்த, எம்மா ஸ்டோன்! -(படங்கள்) அவ்வப்போது கிளாமர்