மேட்டூரில் பெண் உள்பட 3 பேர் மீது ஆசீட் வீச்சு: 7 பேர் கைது!!

Read Time:1 Minute, 56 Second

0ef0787f-1010-4bd1-b1cd-c0a9e35115b7_S_secvpfமேட்டூர் சேலம் கேம்ப் மில் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர் மில் குடியிருப்பு பகுதியை ஏலம் எடுத்தவரிடம் ஒரு வீட்டை விலைக்கு வாங்கு அங்கு குடிபுகுந்தார். இதற்கு சேலம் கேம்ப் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (64), முன்னாள் கவுன்சிலர் அப்துல்சலாம் (60), மீன்மாஞ்ஜான் (47), ரவிந்திரன் (52), சுபா என்கிற சுப்புலட்சுமி (56), உள்பட 10 பேர் முருகனை வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டினர்.

இதை முருகன் தட்டி கேட்டார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் எடை கல், உளி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டல் விடுத்து கொண்டு இருந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்த வெங்கடேஷ், அவரது மனைவி எழிலரசி ஆகியோர் சமாதானம் செய்ய சென்றனர். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வெங்கடேஷ், அவரது மனைவி எழிலரசி உள்பட 3 பேர் மீது வீசினர்.

இதில் காயம் அடைந்த 3 பேரும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மீன்மாஞ்ஜான், ரவிந்திரன் உள்பட 3 பேரை தேடிவருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொரட்டூரில் குளிர்பானம் என நினைத்து எண்ணெய் குழந்தை சாவு!!
Next post அவினாசியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது!!