சத்தியமங்கலம் அருகே வனக்குட்டையில் மூழ்கி 8–ம் வகுப்பு மாணவன் பலி!!

Read Time:1 Minute, 24 Second

b80c02b8-cfd9-44e9-99c8-6548a4e07fc0_S_secvpfஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே உள்ள சுஜில்கரை கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெய்சிராணி. இவர்களது மகன் ஈஸ்வரன் (வயது 12). அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று பள்ளிக்கு ஈஸ்வரன் செல்லவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மதுரைவீரன்தொட்டி வனக்குட்டையில் இறங்கி குளித்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். இதையடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

கிராம மக்கள் வனக்குட்டையில் பிணமாக மிதந்த ஈஸ்வரன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8–ம் வகுப்பு சிறுவன் வனக்குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் உல்லாச உறவை கண்டுபிடித்த கணவன் : கூகுள் பிளஸ்சில் ஹோட்டலுக்கு பாராட்டு!!
Next post நடிகை சோனியாவின் சூடான படங்கள்… (அவ்வப்போது கிளாமர்)