மனைவியின் உல்லாச உறவை கண்டுபிடித்த கணவன் : கூகுள் பிளஸ்சில் ஹோட்டலுக்கு பாராட்டு!!

Read Time:2 Minute, 41 Second

fcd02650-00d9-4640-82f5-78ea0e4d58f4_S_secvpfநமக்கு பிடித்தமான நிறுவனங்களின் சேவையைப் பற்றிய விமர்சனம் எழுதும் வசதியை கூகுள் நிறுவனம், கூகுள் பிளஸ் ரிவியூ என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதன் மூலமாக ஒரு நிறுவனத்தைப் பற்றிய பல வாடிக்கையாளர்களின் விமர்சனத்தைப் படித்து புதிய வாடிக்கையாளர் அந்த நிறுவனத்தின் தரத்தைப் பற்றி சில நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும் அந்த வகையில் அயர்லாந்தில் உள்ள வெஸ்ட் க்ரோவ் தங்கும் விடுதி பற்றி ஒருவர் எழுதியுள்ள குறிப்பு அந்த ஹோட்டலை மிகப் பிரபலமாக்கியுள்ளது.

அந்த நபர் கூகுள் பிளஸ்சில் “என் மனைவியும் அவளது முதலாளியும் இந்த விடுதியில் அறையெடுத்து தங்கி விடுதியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வரை கட்டிலில் உல்லாசமாக இருந்துள்ளனர். ஹோட்டல் பாரில் நன்றாகக் குடித்துவிட்டு அறைக்கு வந்து தங்கள் இரட்டை படுக்கைக்கு செல்லும் முன் நன்றாகக் குளித்துள்ளனர். இதற்காக எனது கிரெடிட் கார்டையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதை வைத்தே எனது மனைவியின் கள்ளத்தொடர்பை நான் கண்டுபிடித்தேன் என்று அந்த நபர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆன பிறகும் என் மனைவியைப் பற்றிய விவரங்களையும் அவர்கள் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தையும் கொடுத்த வெஸ்ட் க்ரோ விடுதிக்கு என் நன்றி” என்று விமர்சனத்தையும் அந்நபர் எழுதியுள்ளார். மேலும் விடுதியின் இந்த சேவைக்காக அதற்கு கூகுள் பிளஸ்சில் ஐந்து நட்சத்திர அந்தஸ்தையும் அவர் வழங்கியுள்ளார்.

இதற்கு பிறகு அந்த கணவர் தன் மனைவியை என்ன செய்தாரோ தெரியாது. ஆனால் வெஸ்ட் க்ரோவ் விடுதியின் சேவையை நாடி பல கணவர்கள் அங்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த விடுதி நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணம்–ஆடம்பர ஆசை காட்டி குடும்ப பெண்களை விபசாரத்தில் தள்ளிய கணவன்–மனைவி கைது!!
Next post சத்தியமங்கலம் அருகே வனக்குட்டையில் மூழ்கி 8–ம் வகுப்பு மாணவன் பலி!!