பணம்–ஆடம்பர ஆசை காட்டி குடும்ப பெண்களை விபசாரத்தில் தள்ளிய கணவன்–மனைவி கைது!!

Read Time:5 Minute, 10 Second

edacb0ba-5db0-419f-920e-0f744b6a453d_S_secvpfபொள்ளாச்சி சூளேஸ் வரன்பட்டி ஏர்பதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 42). இவரது மனைவி கதிக பீவி (47). இவர்கள் பொள்ளாச்சி–கோட்டூர் ரோட்டில் சி.டி.கடை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் தங்களிடம் உதவி கேட்டு வரும் இளம் பெண்களிடம் விபசாரத்தில் ஈடுபட்டால் பணம் மற்றும் ஆடம்பரமாக வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறினர். சில பெண்கள் இதற்கு மறுத்து ஒதுங்கினர்.

ஆனால் வறுமை மற்றும் ஆடம்பர ஆசையால் சில குடும்ப பெண்கள் ஜாகீர் உசேன்–கதிக பீவி வீசிய வலையில் விழுந்தனர். அவர்களை ஜாகீர் உசேன்–கதிக பீவி தம்பதி விபசாரத்தில் தள்ளியது. தங்கள் வீட்டிலேயே விபசாரத்தை நடத்தினர். சொந்த வீடு என்பதால் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

விபசாரத்துக்கு பெண்களை தயார்படுத்திய தம்பதிக்கு வாடிக்கையாளர்களை வளைத்துப்போட அவர்கள் நடத்திய சி.டி. கடை கை கொடுத்தது. சி.டி. கடைக்கு புதுப்படம் மற்றும் ஆபாச படங்களை கேட்டு வரும் வாடிக்கையாளர்களை கண்காணித்தனர்.

அதில் அதிகம் ஆபாச படங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் நைசாக பேசி எதற்கு சி.டி.யை பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்களிடம் குடும்ப பெண்கள் உள்ளனர். பணம் கொடுத்தால் எங்கள் வீட்டிலேயே அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து சி.டி.கடை வாடிக்கையாளர்கள் ஜாகீர் உசேனின் வீட்டுக்கு விபசார வாடிக்கையாளர்களாக படையெடுத்தனர். சொந்த வீடு என்பதால் அவர்களை எங்கள் உறவினர் என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறி சமாளித்தனர். விபசாரத்தொழில் கொடி கட்டி பறந்தது.

மேலும் பல குடும்ப பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களையும் விபசாரத்தில் தள்ளினர். இதனால் ஜாகீர் உசேன்– கதிக பீவி தம்பதியினரின் வீட்டில் பணம் மழை கொட்டியது. கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் வாரி வழங்கினர்.

நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகம் வரவே தம்பதியின் வீடு எப்போதும் பரபரப்பாகவே இருந்தது. இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் தொடர்ந்து குவிந்து கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் கிழக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராதா தலைமையிலான போலீசார் சம்பவ நடக்கும் வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.

வீட்டில் விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்து அங்கிருந்த பெண்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிதறி ஓடி தப்பினர். ஜாகீர் உசேனையும் அவரது மனைவி கதிக பீவியையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது குடும்ப பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

பொள்ளாச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண் 1) போலீசார் ஆஜர்படுத்தினர். தம்பதியை கோவை மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு அரிகரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜாகீர் உசேன்–கதிக பீவி தம்பதி கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது கைதாகியுள்ள ஜாகீர் உசேன்– கதிக பீவி தம்பதி விபசார வழக்கில் ஏற்கனவே கைதாகி அபராதம் செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தம்பதி கைதானதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட குடும்ப பெண்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல ஆண்டுகளாக தென்மாவட்டங்களை கலக்கிய பெண் உள்பட 3 கொள்ளையர்கள் கைது!!
Next post மனைவியின் உல்லாச உறவை கண்டுபிடித்த கணவன் : கூகுள் பிளஸ்சில் ஹோட்டலுக்கு பாராட்டு!!