3 முறை மாரடைப்பு, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு: அனைத்தையும் வென்று உயிர்பிழைத்த 762 கிராம் குழந்தை!

Read Time:3 Minute, 6 Second

b0f3e59a-1182-41ce-aa6e-085c60c3a7ed_S_secvpfபெங்களூரைச் சேர்ந்த பொருளாதார ஆலோசகரான நேகா வியாஸ் தாய்மையடைந்த ஒவ்வொரு பெண்ணும் உணரும் சுகத்தை பரிபூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். ஸ்கேனில் தெரிந்த குழந்தையின் உருவத்தை தனது கணவர் சுரப் வியாஸிடம் காட்டி மகிழ்ச்சியடைந்தார்.

ஆனால், கர்ப்பமடைந்த 6-வது மாதம் செய்த ஸ்கேனில், ’சிசுவின் வளர்ச்சி நின்றுவிட்டது’ என்று மருத்துவர்கள் சொன்னதும் நேகாவின் மூச்சே நின்று விட்டது. அதை நம்ப முடியாமல் வேறு பல இடங்களிலும் ஸ்கேன் செய்து பார்த்தார். அதில் சிசுவின் வளர்ச்சி தடைபட்டிருப்பது உறுதியானது.

பின்னர், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, சிசுவின் உயிரைக் காப்பாற்ற கர்ப்பத்தின் 26-வது வாரத்தில் (கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி) வளர்ச்சியடையாத அந்த சிசுவைப் பெற்றெடுத்தார். பெரும் போராட்டத்தின் முடிவில், வெறும் 762 கிராம் எடையுடன் பிறந்த தனது குழந்தைக்கு அட்டு என்று பெயர் வைத்தார்.

நிம்மோனியா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோயால் தாக்கப்பட்டிருந்த அட்டு, உடனடியாக மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டான். அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிசுவின் நலத்தில் சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கிடையில் அடுத்தடுத்து அந்தப் பச்சிளம் குழந்தைக்கு மூன்று முறை மாரடைப்பும் ஏற்பட்டது.

இது குறித்து நேகா வியாஸ் கூறுகையில் “ஐசியு-வில் முதன் முறையாக எங்கள் அட்டுவை பார்க்கும் போது இந்தச் சின்ன உடலைக் கொண்டு எப்படி இவன் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டான் என்றுதான் தோன்றியது. சிசுவின் முழுவளர்ச்சிக்கு முன்பாக குழந்தை பெறுவதென்பது மிகவும் துயரமான அனுபவம். இப்போது அட்டு நன்றாக இருக்கிறான்” என்றார்.

தற்போது 6 மாதமாகும் அட்டு 3.46 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் கருப்பை போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தியதே அதற்குக் காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராணுவ முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!
Next post பீகாரில் வீட்டின் கதவை தட்டி கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூரன் கைது!!