2013-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1.34 லட்சம்: மந்திரி தகவல்!!

Read Time:1 Minute, 45 Second

e64f8f4a-8cc5-49c5-bb56-931101ce2c3a_S_secvpfநாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இறந்து போனதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், அதற்கடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளன.

பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி, நாட்டிலேயே மிக அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 16 ஆயிரத்து 662 பேரும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 601 பேரும் தற்கொலை முடிவை தேடிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 14 ஆயிரத்து 607 பேரும், மேற்கு வங்காளத்தில் 13 ஆயிரத்து 55 பேரும், கர்நாடகத்தில் 11 ஆயிரத்து 266 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 9 ஆயிரத்து 446 பேரும், கேரளாவில் 8 ஆயிரத்து 646 பேரும் பலியாகியுள்ளதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 585 பேரும், 2012-ல் 1 லட்சத்து 35 ஆயிரத்து 445 பேரும், 2013-ல் 1 லட்சத்து 34 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உ.பி.யில் காட்டு மிராண்டித்தனம்: முதிய தம்பதியர் துடிதுடிக்க சுட்டுக்கொலை!!
Next post ஓடும் ரெயிலில் இருந்து 4 மாத பெண் குழந்தையை தூக்கி வீசிய கொலைகார தாய்: குழந்தை உயிர் பிழைத்தது!!