காதலியின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபன்: பெற்றோர் போலீசில் புகார்!!

Read Time:2 Minute, 3 Second

11f39bd2-91a5-4868-a5a6-62cd8a1c4c0e_S_secvpfதனது முன்னாள் காதலியும் பள்ளி மாணவியுமான 16 வயது பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பரப்பிய 21 வயது வாலிபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நர்கோல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் பண்டாரி(21). இவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 16 வயதுப் பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். தினமும் பள்ளி முடிந்ததும் அருகிலுள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் வைத்து அந்தப் பெண்ணை சந்தித்து வந்த அஜய், 3 மாதங்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணை காம்ப்ளக்சின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.

அஜயும் அந்தப் பெண்ணும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சில வாரங்களுக்கு முன் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர் முடிவு செய்தனர். அப்போது அதிலிருந்து பின் வாங்கிய அஜய், அந்தப் பெண்ணுடனான உறவையும் துண்டித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே அஜயின் நடத்தை தெரிந்ததே என்று எண்ணி அந்தப் பெண்ணின் பெற்றோர் வேறு வரன் தேடத் தொடங்கினர். அந்த நேரத்தில் தான் தனது மகளின் ஆபாச படம் பேஸ்புக்கில் உலவுவது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முந்தினம் அஜய் பண்டாரி மீது காவல் துறையில் அளித்துள்ளனர்.

அஜயை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி ஆவணம் தயாரித்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை விற்க முயன்ற 2 பேர் கைது!!
Next post ஏ.ஆர்.ரகுமானின் ஜெய் ஹோ டிரைலர் (காணொளி)!!