காங்கோ நாட்டில் சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 8 அடி உயர போலீஸ் ரோபோ!!

Read Time:1 Minute, 51 Second

7a2ddc48-a11e-45f3-9eb1-38ef09243b20_S_secvpfமத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் தலைநகரான கின்ஷாஸா-வில் 8 அடி உயர போலீஸ் ரோபோக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் மனிதர்களைவிட வெகு திறமையாக அசத்தி வருகின்றன.

போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் இங்குள்ள மக்கள் காட்டும் மெத்தனத்தையும், சட்டத்தை காப்பாற்ற வேண்டிய போலீசார் சாலை விதிகளை மீறுவோரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களை கண்டும் காணாததுபோல் தப்பிக்க வைப்பதையும் கண்ட அதிகாரிகள், கின்ஷாஸா நகரின் முக்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 8 அடி உயரத்தில் போலீஸ் ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.

மனிதனுக்கு உள்ளதைப் போலவே கூரிய கண்கள், சுழலும் மார்பு பகுதியுடன் சாலையின் நடுவே நிற்கும் இந்த ரோபோக்கள், எவ்வளவு சிக்கலான போக்குவரத்து தடையையும் கன கச்சிதமாக சமாளித்து வருகின்றன. அதே வேளையில், கின்ஷாஸா நகரில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் மீது அக்கறை காட்டாத அரசு நிர்வாகம், ஒவ்வொன்றும் சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் இதைப்போன்ற ரோபோக்களை விலைக்கு வாங்கி பணத்தை விரயம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகில் முதன்முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை: தென்னாப்பிரிக்காவில் சாதனை-இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்!!
Next post இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்கு பதிலடியாக இங்கிலாந்தின் மகள்கள் ஆவணப்படம் தயாரிப்பு!!