முன்னாள் மந்திரி மீது வேலைக்கார சிறுமி போலீசில் பாலியல் புகார்!!

Read Time:1 Minute, 59 Second

6bd817c1-931d-4e55-ab1a-36b45a575280_S_secvpfஜார்க்கண்ட் மாநில முன்னாள் மந்திரி மீது அவரது வீட்டில் வேலை செய்துவந்த 13 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஹேமந்த சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் மாநில பேரிடர் மேலாண்மை துறை மந்திரியாக பதவி வகித்தவர் மன்னான் மாலிக். தன்பாத் மாவட்டத்தில் வசித்துவரும் இவர், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கும் தனது மனைவியை கவனித்துக் கொள்ள 13 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர், மன்னான் மாலிக்கின் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த சிறுமி, தன்னை அவர் அடித்து, உதைத்து துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் குழந்தைகள் நல கமிட்டி மூலம் நேற்றிரவு போலீசில் புகார் அளித்தார்.

குற்றச்சாட்டுக்குள்ளான மன்னான் மாலிக்கை உடனடியாக கைது செய்து நடவடிக்கை வேண்டும் என வற்புறுத்தி தன்பாத் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்னர் இன்று பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் மன்னான் மாலிக்கின் கொடும்பாவிகளையும் எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 71 வயது கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவத்தில் 8 பேர் கைது!!
Next post ஆஸ்திரேலியாவில் குத்திக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் மங்களூரில் இன்று தகனம் செய்யப்பட்டது!!