71 வயது கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவத்தில் 8 பேர் கைது!!

Read Time:3 Minute, 20 Second

43b84416-b72e-4f2d-928a-825974ee829d_S_secvpfமேற்கு வங்காளத்தில் 71 வயது கன்னியாஸ்திரியை கூட்டாக சேர்ந்து கற்பழித்த சம்பவத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு ஆசிரமம் உள்ளது.

நேற்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த ஆசிரமத்துக்குள் புகுந்த நான்கைந்து பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 71 வயது கன்னியாஸ்திரியின் கழுத்தை பிடித்து நெரித்து அவரை கொடூரமான முறையில் கற்பழித்தது. மயங்கிய நிலையில் அவர் கிடந்தபோது பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளயடித்த அந்த கும்பல் தலைமறைவானது.

இன்று காலை அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் தொடங்கியதும் இந்த கொடூரத்தை கண்டு கொதித்தெழுந்த உள்ளூர்வாசிகள் சலேடா-ரங்கத் ரெயில் பாதையையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த மாவட்ட மாஜிஸ்திரேட் குற்றம் நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். இந்த கொடூர தாக்குதலுக்கு மேற்கு வங்காளம் மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி பிர்ஹட் ஹகிம், கல்வித்துறை மந்திரி பார்தா சாட்டர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களது எதிர்ப்பு குரலை பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி.விசாரணைக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேரை பிடித்து விசாரித்து வருவதாகவும், விரைவில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் நாடியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த கொடூர தாக்குதலுக்கு இலக்காகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கன்னியாஸ்திரியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் இடுப்பில் கை வைத்ததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை கடித்தேன்: கம்யூ. பெண் எம்.எல்.ஏ. விளக்கம்!!
Next post முன்னாள் மந்திரி மீது வேலைக்கார சிறுமி போலீசில் பாலியல் புகார்!!