கற்பழிப்பால் 15 வயது மகளுக்கு உருவான கருவை அழிக்க தந்தை மனு: அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு!!

Read Time:4 Minute, 11 Second

2bae161e-c642-45bc-b3c8-2a25bb5db4b1_S_secvpfகற்பழிப்பு சம்பவத்தில் கருவுற்ற மகளின் கருவை அழிக்க அரசு டாக்டர்களுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தந்தை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை ஐகோட்டில், தந்தை ஒருவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தினோம். அதில் சசிகுமார் என்பவரது பெயரை கல்வெட்டில் பதிக்கவில்லை. இதனால், என்னோடு அவன் தகராறு செய்தார். கோவில் திருவிழாவில் அனைவரது முன்னிலையிலும், ‘இந்த ஊரே உன்னை கேவலமாக பார்க்கும்படி உன் குடும்பத்தை சீரழிப்பேன்’ என்று ஆவேசமாக பேசி விட்டு சென்று விட்டார். நானும் அதை பெரிதாக நினைக்கவில்லை.

இந்த நிலையில், 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய என் மகள் கடந்த டிசம்பர் மாதம் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது, என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சசிகுமார், என் மகளை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். இதை வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என்றும் என் மகளை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து என் மகள் என்னிடம் எதுவும் கூறவில்லை. அதேநேரம், அவள் பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்தபோது, அவளிடம் விசாரித்தோம். அப்போதுதான் என் மகளுக்கு நடந்துள்ள கொடூரம் தெரிந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன்.

இதற்கிடையில் என் மகளை சோதித்து பார்த்தபோது, அவள் 9 வார கர்ப்பம் அடைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கருவை கலைக்கும்படி அரசு ஆஸ்பத்திரி டாக்டரிடம் முறையிட்டேன். ஆனால், டாக்டர்கள் கருவை கலைக்க முடியாது. வேண்டும் என்றால் கோர்ட்டுக்கு போய் தடையில்லா சான்றிதழ் வாங்கி வா என்று கடந்த பிப்ரவரி 25-ந்தேதி கூறி விட்டார்கள்.

டாக்டர்களின் செயல் கண்டனத்துக்குரியது. மருத்துவ கரு கலைப்பு சட்டத்தின்படி, கற்பழிப்பு சம்பவத்தில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால், அந்த கருவை கலைக்கலாம் என்று கூறியுள்ளது. ஆனால், அந்த சட்டப்பிரிவை டாக்டர்கள் மதிக்காமல், என் மகளின் கருவை கலைக்க மறுத்து விட்டனர்.

என் மகள் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமி. கற்பழிப்பு சம்பவத்தால், அவள் சுமக்கும் கர்ப்பம், அவளுக்கு உடல் மற்றும் மனரீதியாக வேதனையை அளிக்கிறது. எனவே என் மகளின் கருவை கலைக்க அரசு டாக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு வருகிற 16-ந்தேதி அந்த பெண் வசிக்கும் மாவட்ட கலெக்டர், அரசு ஆஸ்பத்திரி டீன், கற்பழிப்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் போலீசிடம் ஆபாச பேச்சு: உதவி கமிஷனர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் பாயுமா?
Next post என் இடுப்பில் கை வைத்ததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை கடித்தேன்: கம்யூ. பெண் எம்.எல்.ஏ. விளக்கம்!!