திருப்பதியில் போலீஸ் என கூறி பெண்ணை கற்பழித்த 5 பேர் கைது!!

Read Time:1 Minute, 49 Second

57d893ff-7984-46bd-b486-bad3fdc1e14a_S_secvpfதிருப்பதி ராஜீவ்நகரில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் ஒரு பெண் விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. திருப்பதி நகர பாரதீய ஜனதா யுவமோட்சா தலைவர் ராஜகொண்டா விஸ்வநாத் மற்றும் அவரின் நண்பர்கள் 4 பேர் ஸ்ரீநகர் காலனிக்கு சென்றனர்.

விபசார பெண்ணின் வீட்டுக்கு சென்ற அவர்கள் நாங்கள் அலிபிரி போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறோம் என கூறி அந்த பெண்ணை 5 பேரும் கற்பழித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் அந்த பெண் பணம் கேட்டதற்கு போலீசாரிடமே பணம் கேட்கிறாயா? என கூறி மிரட்டி உள்ளனர்.

5 பேரும் சென்ற பிறகு அந்த பெண்ணுக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. உடனே அவர் போலீசில் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த சம்பவத்தை பற்றி கூறி புகார் செய்தார். தகவல் அறிந்த அலிபிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, ராஜகொண்டா விஸ்வநாத் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து அலிபிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசலு கூறுகையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் யார் மீதும் அனுதாபம் காட்ட இயலாது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூர் அருகே ரெயில் விபத்தை தடுத்த 11 வயது சிறுவன்!!
Next post கிராம உதவியாளரை கன்னத்தில் அறைந்த வருவாய் ஆய்வாளர்: தாசில்தார் அலுவலகம் முற்றுகை!!