வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்தூர் ரிக் அதிபர் கடத்தி சித்ரவதை!!

Read Time:5 Minute, 19 Second

57324440-eaa2-4cf3-8d1d-850dc55086a2_S_secvpfசேலம் மாவட்டம் ஆத்தூர் கந்தசாமிபுதூர் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். ரிக் அதிபர். இவருக்கு சந்தோஷ் (26), அபிஷேக் (20) ஆகிய 2 மகன்களும், ரம்யா (23) என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ் தனது தந்தையுடன் சேர்ந்து ரிக் தொழில் செய்து வருகிறார்.

ரிக் தொழிலுக்காக பழனிவேல், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் வட்டிக்கு கடன் வாங்கினர்.

ரிக் வண்டி தற்போது சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ளது. அதனுடன் பழனிவேலும் சென்று உள்ளார். கடந்த சில மாதங்களாக ரிக் வண்டி சரிவர இயங்காததால் இவர்களால் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியவில்லை.

இதனால் பணத்தை கொடுத்த பைனான்ஸ் நிறுவனத்தினர் வட்டி மற்றும் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். தொழில் சரிவர இல்லாததால் பணத்தை திருப்பி கொடுக்க ரிக் அதிபர் கால அவகாசம் கேட்டு வந்தார். ஆனால் பைனான்ஸ் நிறுவனத்தினர் மறுத்து விட்டனர்.

கடந்த 15–ந் தேதி நள்ளிரவு சந்தோஷ் தெற்கு காடு பகுதியில் உள்ள தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த 8 பேர் கும்பல் சந்தோஷை தாக்கி காரில் திருச்செங்கோட்டுக்கு கடத்தி சென்றனர். அங்கு அவர்கள் ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து கட்டி வைத்து தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ரிக் வண்டியின் ஆர்.சி. புத்தகத்தை கேட்டனர். அதற்கு சந்தோஷ் தனது தந்தை சத்தீஷ்கரில் உள்ளார். அவர் வந்ததும் கடனை திருப்பி கொடுத்து விடுகிறோம் என்று கூறியுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை தொடர்ந்து தாக்கி ஆர்.சி.புத்தகம் எங்கு இருக்கிறது என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க சந்தோஷ் ரிக் வண்டியின் ஆர்.சி. புத்தகம் மல்லியக்கரை பகுதியில் உள்ள உறவினர் செல்வம் என்பவர் வீட்டில் இருப்பதாக கூறினார். இதையடுத்து அந்த கும்பல் மீண்டும் சந்தோசை காரில் ஏற்றி கொண்டு மல்லியக்கரை பகுதிக்கு வந்தனர்.

பின்னர் அந்த பகுதியை சேர்ந்த பைனான்ஸ் புரோக்கர் பாலு என்பவர் செல்வம் வீட்டிற்கு சென்று ஆர்.சி. புத்தகத்தை வாங்கி வந்து அந்த கும்பலிடம் கொடுத்தார். அதன் பின்னர் அவர்கள் சந்தோசை அந்த பகுதியில் உள்ள ஒரு நீரோடையில் தூக்கி வீசிவிட்டு அங்கு இருந்து சென்று விட்டனர்.

கும்பல் கடத்தி தாக்கியதில் படுகாயம் அடைந்த சந்தோசை மீட்டு நேற்று மாலை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மல்லியக்கரை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ரிக் அதிபர் சந்தோஷ் கூறியதாவது:–

திருச்செங்கோட்டை சேர்ந்த பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்று இருந்தோம். தற்போது வண்டி சரியாக இயங்காததால் சரியான நேரத்தில் வட்டி மற்றும் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கு கால அவகாசம் கேட்டு இருந்தோம். ஆனாலும் என்னை நள்ளிரவில் வந்து கடத்தி சென்று லாட்ஜில் அடைத்து வைத்து தாக்கினர்.

அப்போது நான் எனது தந்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ளார். அவர் வந்ததும் பணத்தை செலுத்துகிறோம் என்றேன். ஆனாலும் என்னை தாக்கி ஆர்.சி. புத்தகத்தை வாங்கி சென்று விட்டனர் என்று கூறினார்.

வாங்கிய கடனுக்காக தனது மகனை பைனான்ஸ் நிறுவனத்தினர் கடத்தி சென்று தாக்கிய தகவல் தெரிய வந்ததும் பழனிவேல் சத்தீஷ்கரில் இருந்து ஊர் திரும்பி கொண்டு இருக்கிறார்.

இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் புகாரில் சிக்கிய ஆசிரியர் கைதாகிறார்: கலெக்டருக்கு தவறான அறிக்கை கொடுத்த கல்வி அதிகாரி மீதும் நடவடிக்கை பாய்கிறது!!
Next post பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு 20–ந் தேதிக்கு ஒத்திவைப்பு!!