செல்பி போட்டியில் முதல் பரிசு வென்ற இளம்வயது பெண் டாக்டர்!!
Read Time:59 Second
கோவாவை சேர்ந்த ஒரு ஆடைகள் வடிவமைப்பு நிறுவனமும் பிளெண்டர்ஸ் பிரைட் மது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கைபேசி மூலம் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து அனுப்பும் ‘சிறந்த செல்பி’ போட்டியை கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தது. சுமார் நான்கு மாதங்களாக நடைபெற்றுவந்த இந்தப் போட்டிக்கு ஏராளமான செல்பி புகைப்படங்கள் வந்திருந்தன.
இவற்றில் முதல் பரிசுக்குரிய செல்பியாக இளம்வயது பெண் டாக்டர் லினோஷ்கா டி’சில்வா அனுப்பிய புகைப்படம் தேர்வு செய்யப்பட்டது. மற்றொரு போட்டியாளரான பவன் பட்டேல் அனுப்பிய செல்பி இரண்டாம் இடத்தை பிடித்தது.
Average Rating