கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு பயந்து கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த தாய்: மராட்டியத்தில் கொடூரம்!!

Read Time:2 Minute, 6 Second

10577518-2894-4a05-aa4c-fc55617797e2_S_secvpfகாமுகர்களின் பார்வையில் இருந்து தனது 13 வயது மகளின் அடையாளத்தை மறைக்க பெற்ற தாயே அவளுக்கு மொட்டை அடித்து, விகாரப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மராட்டிய மாநிலம், தானே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு சமூகவிரோத கும்பல் கொடூரமாக கற்பழித்தது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, குற்றவாளிகளை கைது செய்த போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் கூலிப்படையினரை ஏவி அந்த சிறுமியின் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வழக்கை வாபஸ் பெறும்படியும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில், சிறையில் உள்ள குற்றவாளிகள் ஜாமினில் விடுதலையாகப் போவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

போலீசில் புகார் அளித்து சிறைக்கு அனுப்பிய தங்களின் மகளை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் அவர்கள் கற்பழித்து விடுவார்களோ என பெற்றோர் பீதியடைந்தனர். அந்த காமுகர்களின் பார்வையில் இருந்து தனது மகளின் அடையாளத்தை மறைக்க பெற்ற தாயே அவளுக்கு மொட்டை அடித்து, அவளை விகாரப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டசபை முன் ஆபாசத்தால் சிக்கல்!!
Next post 90 நாட்களில் உலகை சுற்றி 12 நாடுகளில் 38 முறை திருமணம் செய்து மகிழும் அபூர்வ காதலர்கள்!!