200 ரூபாய் லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டருக்கு 3 ஆண்டு சிறை

Read Time:2 Minute, 7 Second

Jail.jpgபதினொரு ஆண்டுகளுக்கு முன் 200 ரூபாய் லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டருக்கு 3 ஆண்டுகள் சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுதில்லி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. புதுதில்லி ராஞ்சியில் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றியவர் கே.என்.ஷா. 50 ஆயிரம் ரூபாய்க்கான கிஸôன் விகாஸ் பத்திரங்களை வழங்க, ராம் சந்திர ராம் என்பவரிடம் இவர் 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து ராம் சந்திர ராம் சிபிஐயிடம் புகார் செய்தார். லஞ்சம் வாங்கும் போது ஷாவைக் கையும் களவுமாக சிபிஐ போலீஸôர் பிடித்தனர். இச்சம்பவம் 1995-ல் நடந்தது. அதே ஆண்டு ஏப்ரல் 24-ல் ஷா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் வழக்கு விசாரணை தொடங்கியது. 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 16 கோப்புகள் சரிபார்க்கப்பட்டன. இதைச் செய்து முடிப்பதற்குள் 11 ஆண்டுகள் ஓடிவிட்டன.

முடிவில், ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி வியாழக்கிழமை தீர்ப்புக் கூறினார். அதன்படி, 200 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக ஷாவுக்கு 2 அரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கிரிமினல் சட்டப்படி தவறான நடவடிக்கைக்காக 3 ஆண்டு சிறையும் வழங்கினார்.

இந்த இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்த இரண்டு குற்றங்களுக்காக ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இஸ்ரேல் படை வீரரை விடுவிக்க மறுப்பு:- பாலஸ்தீன இயக்கத்தின் மீது…
Next post ஜெர்மனி கனவை தகர்த்த இத்தாலி: 2-0