உதவி கேட்டு வந்த 16 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்!!

Read Time:2 Minute, 48 Second

c61d97bd-88c7-4c1e-9671-770b173f686a_S_secvpfஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், உதவி கேட்டு வந்த 16 வயது பருவப்பெண்ணை காம வலையில் வீழ்த்திய 60 வயது முதியவர், 8 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளர்ப்பு பெற்றோர் இறந்த பின்னர் 80 வயது பாட்டியுடன் வசித்து வந்த அந்த பெண் வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். அப்போது அவரது தூரத்து உறவினரான சாயிக் பரீத் ஷாகின்ஷா (வயது 60) நிதி உதவி செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன்பின்னர் பாட்டியின் சிகிச்சைக்கு பண உதவி கேட்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி பரீத் ஷாகின்ஷாவின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஷாகின்ஷா, அந்த பெண்ணை தனது காம வலையில் வீழ்த்தி கற்பழித்ததாக கூறப்படுகிறது.

நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளார். அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும், பாட்டியையும் கவனித்துக்கொள்வதாகவும் கூறிய ஷாகின்ஷா, கடந்த 8 மாதங்களில் அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். தனது ஆசை தீர்ந்ததும் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அரசியலில் முக்கிய புள்ளியாக விளங்கும் அவரது மகனும் சிலரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். ஊரைவிட்டு செல்லும்படியும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண், போலீஸ் கமிஷனர் அமித் கார்கிடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஷாகின்ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. புகார் அளித்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்த தையலக மேனேஜர் கைது!!
Next post இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை: உ.பி. கோர்ட் அதிரடி தீர்ப்பு!!