ராக்கிங் செய்த போது காதல் மலர்ந்தது: மனைவி காலைத் தொட்டு வணங்கும் டெல்லி மந்திரி!!

Read Time:2 Minute, 31 Second

019df830-4580-4f5b-9010-e97ec0c64102_S_secvpfஅரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில மந்திரி சபையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் குமார். இவரது பூர்வீகம் அரியானா மாநிலம். தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் டெல்லியில் குடியேறினார்கள்.

தன்னுடன் கல்லூரியில் படித்த ரீத்து வர்மாவை 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தார். இவர் தனது மனைவியை தினமும் காலைத் தொட்டு வணங்கிய பின்புதான் வெளியில் செல்கிறார். அந்த அளவுக்கு பெண்கள் மீது அன்பும், மரியாதையும் செலுத்துகிறார். இதனால்தான் அவரை மகளிர் நல மேம்பாட்டு மந்திரியாக கெஜ்ரிவால் நியமித்துள்ளார்.

மனைவியை வணங்குவது பற்றி மந்திரி சந்தீப்குமார் ஒரு விழாவில் பேசியதாவது:–

என் மனைவி எனக்காக பிறந்தவள். அவளை நான் மதிக்கிறேன். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தினமும் காலையில் அவளது காலைத் தொட்டு வணங்குகிறேன்.

அப்போது அவள் புன்சிரிப்புடன் வெற்றி பெற என்னை வாழ்த்துவார். நாங்கள் இருவரும் முதலில் கல்லூரியில் படித்த போதுதான் சந்தித்தோம். அப்போது நான் அவளை பாட்டுப்பாட சொல்லி ராக்கிங் செய்தேன். அவள் பாடினாள். அதன் பிறகு எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. 7 ஆண்டுகள் பழகிய பின்பு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்தேன்.

நான் மனைவி காலில் விழுவதை என் நண்பர்கள் ஜோக் அடித்து கிண்டல் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரித்து கூறுகையில், ‘அவர் என் காலைத் தொட்டதும் நான் புன்சிரிப்புடன் வெற்றி பெற வாழத்துக்கூறுவேன்’ என்றார். தற்போது சந்தீப்புக்கு 34 வயதும், ரித்துவுக்கு 29 வயதும் ஆகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிளஸ்–2 தேர்வு எழுதிய நடிகை…!!
Next post தூங்கும் வசதி ரெயில் பெட்டிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்வு!!