தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் இரண்டாவது தடவையாக தொடர்த் தாக்குதல்
மூதூர் கட்டப்பறிச்சான் பகுதியில் பிரபாகுழுவின் காவலரண் மீதும், மினிமுகாங்கள் மீதும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் இணர்டாவது தடவையாக தொடர்த் தாக்குதல் நேற்று(07.05.06) இரவு 11:30 மணியளவில் மூதூர் கட்டறிச்சான் பகுதியில் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் விசேட தாக்குதல் படையணி வன்னிப்புலிகளின் இணர்டு மினிமுகாங்கள் மீதும் ஒரு காவலரண் மீதும், ஒரேநேரத்தில் தொடர் அதிரடித்தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இதுகுறித்து அதிரடிக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் மேற்படித் தாக்குதலை தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் மூத்ததளபதி nஐயம், இராணுவத்தளபதி மார்க்கன், மற்றும் மங்களன்மாஸ்டர் தலைமையில் சென்ற மூன்று வெ வ்வேறு விசேட தாக்குதல் படையணிகளே வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டு பிதேசத்தில் அமைந்திருந்த கட்டைப்பறிச்சான், இறால்குழி, சம்பூர் ஆகிய பிரதேசங்களில் இமைந்திருந்த இணர்டு மினிமுகாம்கள் மீதும் ஓர் காவலரண் மீதும் குறிப்பிட்ட ஒரேநேரத்தில் துரிதமாக தாக்குதலை நடாத்திவிட்டு தளம் திரும்பியுள்ளதாகவும் இத்தாக்குதலில் வன்னிப்புலிகளின் தரப்பில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கலாமென நம்பப்படுகின்ற போதிலும் சேதவிபரங்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.