துறையூர்: செலவுக்கு பணம் கொடுக்காததால் தந்தையை கொன்ற மகன்!!

Read Time:3 Minute, 38 Second

427d24fa-899a-4eb2-8216-a10f9888583c_S_secvpfதுறையூரை அடுத்த கோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி ஆசாரி (65). கொல்லன் பட்டறை வேலை செய்பவர். இவருக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மகள் தங்கமணி ஹோம் கார்டு போலீசாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

திருமணமாகி அதே ஊரில் தனியாக குடித்தனம் செய்து வருகிறார். அடுத்த மகன் பாலகுமார் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மகன் துரைராஜ் (35) இவருக்கு திருமணமாகி மனைவி விட்டு விட்டு சென்றுவிட்டார். 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. குப்புசாமி மனைவி சரோஜா மகன் துரைராஜ் மற்றும் பேத்தி ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று மாலை குப்புசாமி வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது துரைராஜூம் வீட்டில் இருந்துள்ளார். துரைராஜ் வீட்டில் தனியாக இருந்த தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டு தகறாறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறி அம்மி கல்லை தூக்கி தந்தையின் தலையில் போட்டுள்ளார்.

இதில் தலை நசுங்கி சத்தமே இல்லாமல் சம்பவ இடத்திலேயே குப்புசாமி இறந்து விட்டார். பிறகு துரைராஜ் வீட்டை பூட்டி விட்டு நடந்து கடைவீதி வழியாக பதட்டத்துடன் வேக வேகமாகச் சென்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் சந்தேகத்துடன் வீட்டை எட்டி பார்த்துள்ளனர். கதவு சந்தின் வழியாக ரத்தம் வழிந்தோடி வந்துள்ளது. அந்த சமயத்தில் ஆடு மேய்க்க சென்றிருந்த சரோஜாவும் வந்துள்ளார். உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குப்புசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இது பற்றி உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற துறையூர் இன்ஸ்பெக்டர் செழியன், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா ஆகியோர் பிரேதத்தை கைபற்றி துறையூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணை செய்ததில் குப்புசாமியின் மகன் துரைராஜ் வேலை ஏதும் இல்லாமல் ஊர் சுற்றிவருவதும் அடிக்கடி தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டு தகறாறில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

மேலும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய துரைராஜை தேடிவருகின்றனர். செலவுக்கு பணம் தராததால் பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த சம்பவம் கோட்டப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரையில் காசநோய் விழிப்புணர்வு பேரணி!!
Next post போலீஸ் கையாள் என நினைத்து கூட்டாளியை சுட்டுக் கொன்றவனை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!!