பொது இடங்களில் முத்தமிடுவதற்கு தடை விதித்த கோவா கிராமம்!!

Read Time:1 Minute, 43 Second

1ff22b8f-f333-46be-aca5-53eea1c11f3b_S_secvpfகோவா மாநிலத்தில் உள்ள சால்வடோர் டு முண்டோ என்ற கிராமத்தில் பொது இடங்களில் காதல் ஜோடிகள் முத்தமிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை எரிச்சலடையச் செய்யும் வகையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததையடுத்து சால்வடோர் டு முண்டோ கிராமத்தில் சமீபத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டு இதுபற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது, பொது இடங்களில் முத்தமிடுவது, மது அருந்துவது மற்றும் ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு கேட்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தடை பற்றிய விவரங்களுடன் கூடிய பேனர்களும் பொது இடங்களில் வைக்கப்பட்டன. இதனை புகைப்படம் எடுத்த சிலர் சமூக வலைத்தளம் மூலம் உலவ விட்ட பிறகே இந்த தடை பற்றிய விவரம் வெளி உலகிற்கு தெரிய வந்தது. கிராம பஞ்சாயத்தின் தடை உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சாயத்தில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பஞ்சாயத்து துணைத்தலைவர் ரீனா பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 நிமிடங்களில் தேங்காய் நார் உரிக்கும் நாய்!!
Next post மேற்குவங்க சி.ஐ.டி. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை: கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!