லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு!!

Read Time:3 Minute, 23 Second

023505e2-b07e-41f7-8441-6b687f7c6548_S_secvpfநவீன சொகுசு மற்றும் அதிவேக கார்களை தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற கருடா நிறுவனம் புதிய 2016 XF ரக கார்களை தயாரித்துள்ளது.

சாதாரண கார்களை போல் அல்லாமல் இந்த காரின் உடல் பகுதி முழுவதும் எடை குறைவான அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் எந்த கடினமான சவாலையும் சந்திக்க வல்லது என்பதை நிரூபிக்க நினைத்த கருடா நிறுவனம் மூளையை கசக்கி, இந்த காரின் அறிமுக விழாவுக்கு முன்னதாக ஒரு சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

லண்டன் நகரில் ராயல் டாக் துறைமுகம் பகுதியில் உள்ள நீர்நிலையின் மீது 800 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட 1.3 அங்குல கனமுள்ள கயிற்றின்மீது இக்கரையில் இருந்து அக்கரை வரை செல்லும் சாகச நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது.

மெல்லியதொரு கயிற்றின் மீது ஓடக்கூடிய அளவுக்கு ‘கருடா 2016 XF’ கார்கள் செயல்திறன் வாய்ந்ததுதான். ஆனால், கயிற்றின் மீது இதை ஓட்டிக்காட்டி, இந்த செயல்திறனை நிரூபிக்க டிரைவர் வேண்டுமே…?

உடனடியாக, ஜிம் டோவ்டெல் என்பவரை தேடி கண்டுபிடித்தனர். ஹாலிவுட் பட சாகச நாயகனான ஜேம்ஸ் பாண்ட் நடித்த பல படங்களில் இடம்பெற்ற கார் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் படத்தின் சண்டைக் காட்சிகளில் சிலிர்ப்பூட்டும் வகையில் சாகசங்களை நிகழ்த்திய ஜிம் டோவ்டெல்-லும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

இருப்பினும் நீர்நிலைக்கு மேலே-மிக மெல்லிய கயிற்றின்மீது-நாற்புறமும் சுழன்றடிக்கும் காற்றின் போக்குக்கு ஈடு கொடுத்து- இந்த சாகசத்தை நடத்துவது மிகவும் சவாலான விஷயம் என்றே எனக்கு தோன்றியது. அதிலும் இந்த கார், 4 சக்கரங்களும் ஒரே வேளையில் உருளும் வகையில் (4 wheel drive) தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது. இதனால், மிகுந்த ‘பேலன்ஸ்’ உடன் இந்த சவாலை நிறைவேற்ற வேண்டி இருந்தது.

கரணம் தப்பினால் மரணம் என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த சாகசத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியம் என்னை ஆட்கொண்டது. ஆவது ஆகட்டும் என்ற துணிச்சலுடன் இந்த சாகசத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, இதோ… உங்கள் முன்னால் உயிருடன் நின்று பேட்டியளித்து கொண்டிருக்கிறேன் என ஜிம் டோவ்டெல் சிரித்தபடி கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு: தலைமறைவான போலீசாரை பிடிக்க தீவிரம்!!
Next post தற்கொலைக்காக கார் டிரைவர் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை நண்பர் குடித்து இறந்தார்!!