கேரளாவில் 5 நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மதுபார்கள் இயங்கலாம்: அரசு உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்!!

Read Time:1 Minute, 40 Second

8cbeff7a-cb12-4be2-abd0-93c8a9f7674f_S_secvpfகேரளாவில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டும் மதுபார்களை நடத்த அனுமதிக்கும் அரசின் முடிவுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவில் மதுபான கொள்கையை மாற்றியமைத்த மாநில அரசு நட்சத்திர ஓட்டல்கள் தவிர மற்ற இடங்களில் உள்ள மதுபார்களை மூட உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து இரண்டு நட்சத்திர மற்றும் முன்று நட்சத்திர ஓட்டல்களின் உரிமையாளர்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத பார்களின் உரிமையாளர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.டி.சங்கரன், பாபு மேத்யூ பி.ஜோசப் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களின் மனுவை தளளுபடி செய்த நீதிபதிகள், அரசின் உத்தரவை உறுதி செய்தனர்.

4 நட்சத்திர ஓட்டல்களில் பார்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று முன்னர் வேறு அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து மாநில அரசு தாக்கல் செய்த மனுவை 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் – சன்னி லியோன் வருத்தம் -அவ்வப்போது கிளாமர்-
Next post இரண்டு ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டிருந்த 4 வயது சிறுமி அரசு காப்பகத்துக்கு மாற்றம்!!